சென்னை மெயின் பிளேஸில் 11 கிரவுண்ட் இடத்திற்கு போலி பட்டா? - அதிரடியாக இறங்கிய போலீசார்

Update: 2024-05-05 06:03 GMT

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள 11 கிரவுண்ட் இடத்தினை போலி உயில் மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயன்ற நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்...கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஜார்ஜ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், தான் சமீபத்தில் வாங்கிய 11 கிரவுண்ட் இடத்தினை போலி ஆவணங்கள் மூலம் ஒருவர் விற்பனை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்து இருந்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் டிரஸ்டுக்கு சொந்தமான 11 கிரவுண்ட் இடத்தை சென்னையை சேர்ந்த மறைந்த பத்மினி சந்திரசேகர் என்பவர் கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் பல தொண்டு காரியங்களுக்காக குறிப்பிட்ட சிலரின் நலன்களுக்காகவும் உயில் ஒன்றை எழுதியதும், 1995ல் உயில் சான்றளிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றுபவர்கள் தற்போதைய உரிமையாளர்களுக்கு கிரயம் செய்த நிலையில், கிரையம் செய்யப்பட்டுள்ள நபர்கள் பிரான்சிஸ் ஜார்ஜுக்கு விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில், திடீரென 2023 ஆம் ஆண்டு கடலூரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் மறைந்த பத்மினி சந்திரசேகர் தனது உறவினர் என்றும் தனது பெயரில் உயில் எழுதி வைத்திருப்பதாகவும் போலி உயிலைக் காண்பித்து நீதிமன்றம் வரை செல்ல, நீதிமன்றம் இது போலியானது என தெரிவித்துள்ளது. அப்போதும், விடாமல் தனது மனைவி பெயரில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக பொய் கூறி போலியாக கணக்கு காட்டி ஆவணங்கள் தயாரித்து அதற்கு பட்டாவும் வாங்கி விற்கவும் பயின்றுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்