கடன் வாங்கி தருவதாக மோசடி.. மகனுக்காக வீட்டை இழந்த முதியோர்.. கண்ணீருடன் குமுறி அழும் தாய், தகப்பன்

Update: 2024-05-05 05:41 GMT

சென்னை ஓட்டேரியை சேர்ந்த ரமேஷ் உமா தம்பதி தனது மகனின் மருத்துவ செலவிற்காக 30 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். மகன் இறந்த நிலையில், அந்த பணத்தை திருப்பிக் கட்ட முடியாமல் தவித்தனர். அப்போது கோபி என்பவர் அறிமுகமாகி, ரமேஷின் சொத்து ஆவணத்தை வைத்து 30 லட்சம் கடனாக பெற்று தருவதாக கூறியுள்ளார். ஆனால் வயதான தம்பதிகளுக்கு தெரியாமல் ஒரு கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு கோபி தலைமறைவானார். இதனிடையே வாங்கிய கடனுக்கு , வயதான தம்பதிகளின் சொந்த வீடு பறிபோனது. இந்த வழக்கு தொடர்பாக 4 அண்டுகளாக காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், எந்த நடவடிக்கையும் இல்லை என வயதான தம்பதி கண்ணீருடன் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்