"பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆண்டு சம்பள உயர்வு வழங்க இயலாது" - பள்ளிக் கல்வித் துறை திட்டவட்டம்

பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால் ஆண்டு சம்பள உயர்வு வழங்க இயலாது என பள்ளிக்கல்வி திட்டவட்டாக தெரிவித்துள்ளது.

Update: 2019-11-27 11:12 GMT
சம்பள உயர்வு கோரி கடலூரை சேர்ந்த  பகுதிநேர ஆசிரியர் செந்தில்குமார் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 177யின்படி பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிக பணியாளர்களாக கருதப்படுவார்கள் என விளக்கம் அளித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த விளக்கம் சம்பள உயர்வு கோரி போராடும் பகுதிநேர ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்