உடல் உறுப்பு தானம் வழங்க முன்வர வேண்டும் : சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் அழைப்பு

தமிழக முதல்வர், எதிர்க் கட்சித் தலைவரை போல, உடல் உறுப்புகளை தானமாக வழங்க அனைத்து எம்.எல்.ஏ-க்களும் முன்வர வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-07-16 09:58 GMT
தமிழக முதல்வர், எதிர்க் கட்சித் தலைவரை போல, உடல் உறுப்புகளை தானமாக வழங்க அனைத்து எம்.எல்.ஏ-க்களும் முன்வர வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை, தமிழகத்தில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் அதிகளவில் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தகவல் வருவதாக பேசினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு உடல் உறுப்புகள் கொண்டு வரப்படுவதாகவும், தமிழகத்தில் இருந்து ஒரு உறுப்பு கூட வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில்லை என தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் அவரின் மனைவியும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சி என அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஏற்கனவே உடல் உறுப்பு தானம் செய்ய விண்ணப்பித்து உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்