#Breaking|| வாக்குகள் பதிவான ஓட்டு மெஷின்கள் தீயில் கருகிய பயங்கரம்.. அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்

Update: 2024-05-08 06:29 GMT

மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் நேற்றிரவு வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோலா கிராமம் அருகே இரவு 11 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பேருந்தில் ஏற்பட்ட தீப்பொறியே காரணம் என கூறப்படுகிறது. வாகனத்தை முற்றிலுமாக தீயில் கருகின,இருப்பினும் அனைத்து வாக்குச்சாவடி ஊழியர்களும் ஓட்டுநரும் காயமின்றி வெளியேறியதாக பெத்துல் மாவட்ட ஆட்சியர் நரேந்திர சூர்யவன்ஷி உறுதிப்படுத்தினார்

இதற்கிடையில் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட நான்கு வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் சேதமடைந்தன மற்றும் இரண்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட.சேதமடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் இந்தச் சம்பவத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து, தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க உள்ளதாக ஆட்சியர் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்

பெதுல் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 72.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் , இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மறு வாக்குப்பதிவு தேவையா என்பது குறித்த முடிவு ஆணையத்திடம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.விபத்தின்போது , 36 பணியாளர்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியேரியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.இருப்பினும் பேருந்து முற்றிலுமாக தீயில் கருகின

Tags:    

மேலும் செய்திகள்