பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரம்சிவகுமாரைக் கண்டித்து ஜனதா தளக் கட்சியினர் போராட்டம்

Update: 2024-05-08 06:30 GMT

பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாரைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். பிரஜ்வல் ஆபாச வீடியோ குமாரசாமியின் குடும்பத்தாரால் வெளியிடப்பட்டது என்றும் பிரஜூவலுக்கு ஆதரவாக குமாரசாமி பிரச்சாரம் செய்துவிட்டு தற்போது அவருக்கும் தனது குடும்பத்திற்கும் சம்பந்தமில்லை என கூறுவது எந்த வகையில் நியாயம் எனவும் சிவக்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு குமாரசாமியும் பதிலடி கொடுத்திருந்தார். கட்சித் தலைவர்கள் இடையே நடந்த இந்த வார்த்தை மோதலால், தொண்டர்கள் கொந்தளித்துள்ளனர்... சிவக்குமாரின் பேச்சைக் கண்டித்து மதசார்பற்ற ஜனதா தள கட்சி அலுவலகத்தின் வெளியே தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்