வி.ஏ.ஓ., மணல் கடத்தல்காரர்களிடம் உரையாடும் ஆடியோ...
கிராம நிர்வாக அலுவலர் மணல் கடத்தல்காரர்களுடன் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது.;
வேலூர் மாவட்டம் ஆற்காட்டு தாலுகா சொரையூர் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் மணல் கடத்தல்காரர்களுடன் உரையாடிய ஆடியோ வெளியாகியுள்ளது. ஏற்கனவே அரக்கோணம் அய்யம்பேட்டையில் பணிபுரிந்த போது, லஞ்சம் வாங்கிய புகாரில் 3 மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விஸ்வநாதன் சொரையூரிலும் மணல் கடத்தல்காரர்களுக்கு துணைபோய் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.