Chennai Corporation | சென்னையில் சாலையோர வணிகர்களுக்கு கட்டணம் அறிவிப்பு... யார்யாருக்கு எவ்வளவு?
சென்னையில் நடைபாதை வியாபாரிகளுக்கு புதிய கட்டண முறையை அறிவித்துள்ள மாநகராட்சி,
விற்பனைச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது.
மாநகராட்சி வெளியிட்டுள்ள பட்டியலில் நிலையான விற்பனை இடம் இல்லாமல், நகர்ந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் ஆண்டிற்கு ரூபாய் 1,500 செலுத்த வேண்டும்.நிரந்தர இட வணிகர்கள் 10 சதுர அடி வரை ஆண்டுக்கு 750 ரூபாயும், 25 சதுர அடி வரை 3 ஆயிரம் ரூபாய் வரையும் செலுத்த வேண்டும். நிலையான விற்பனை இடம் இல்லாமல், நகர்ந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் ஆண்டிற்கு ரூபாய் 1,500 செலுத்த வேண்டும். மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்துவோர், 25 சதுர அடிக்கு மேல் உள்ள இடத்திற்கு ரூபாய் 3,000 செலுத்த வேண்டும். மோட்டார் வாகனங்கள் இல்லாத நகரும் வியாபாரிகள் 1,500 வரை கட்டணம் செலுத்த வேண்டும். தலையில் வைத்து வியாபாரம் செய்யும் வணிகர்கள் ஆண்டிற்கு பெயரளவுக்கு ரூபாய் 250 மட்டுமே செலுத்தினால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.