Chennai Airport | சென்னை ஏர்போர்ட்டை பரபரப்பாக்கிய குருவி - இப்படியெல்லாம் கடத்தல் நடக்குமா?
சென்னை ஏர்போர்ட்டை பரபரப்பாக்கிய குருவி - இப்படியெல்லாம் கடத்தல் நடக்குமா?
சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட, 1 கிலோ 958 கிராம் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வடமாநில இளைஞர் கஞ்சாவை, 10 உணவு பாக்கெட்டுகளில் பதுக்கி வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் கூலிக்காக வேலை செய்யும் கடத்தல் குருவி என்பது தெரிய வந்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 75 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.