Madurai | இதுதான்யா தமிழ்நாடு.. கிறிஸ்துமஸ் கேக் வெட்டி இஸ்லாமியர்களுக்கு கொடுத்த முருகன், மீனாட்சி
இஸ்லாமியர், இந்துக்களுடன் கிறிஸ்துமஸ் விழா-முருகன் வேடமணிந்த குழந்தை
மதுரை கீழ வெளி வீதியில் உள்ள தூய வியாகுல அன்னை திருத்தல பேராலயத்தில், முருகன், மீனாட்சி வேடமணிந்த குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் கேக்கை வெட்டி இஸ்லாமியர்களுக்கு கொடுத்தது நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சமீபத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் சர்சையான நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், மதச்சார்பற்ற ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் திருச்சபை மக்கள் அனைவரும் கலந்து கொண்டது பாராட்டை பெற்றுள்ளது.