Radhika Apte | "அம்மா,தங்கச்சி கிட்டயும் இப்படித்தான் சொல்லுவாங்களா.." - மனம் உடைந்து ஓபனாக பேசிய பிரபல நடிகை

Update: 2025-12-21 03:17 GMT

தென்னிந்திய பட ஷூட்டிங்கில் சங்கடமான அனுபவங்கள்“

தென்னிந்திய பட ஷூட்டிங் சமயங்களில் சில சங்கடமான அனுபவங்கள் தனக்கு ஏற்பட்டதாக நடிகை ராதிகா ஆப்தே ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

ராதிகா ஆப்தேயின் சாலி மொகாபாத் திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியானது. இதையடுத்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ராதிகா ஆப்தே, தென்னிந்தியாவில் பல நல்ல சினிமாக்கள் வருவதாகவும்... ஆனால் செட்டில் தான் ஒருவர் மட்டும் பெண்ணாக இருக்கும் சமயங்களில் சில சங்கடமான அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.. எடுப்பாக தெரிய வேண்டும் என தனது மார்பகம் மற்றும் பின்பக்கத்தில் அதிக “pad“களை வைக்க தான் நிர்பந்திக்க பட்டதாகவும்... அதற்கு தான் மறுத்து விட்டதாகவும்... வீட்டிலும் அவர்கள் தங்கள் தாய், தங்கைகளிடம் இப்படித்தான் வைக்க சொல்வார்களா என கேட்க தோன்றும் எனவும் காட்டம் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்