Surya | 8 ஆண்டுகளுக்குப் பிறகு.. சூர்யா Fans-க்கு செம சர்ப்ரைஸ்

Update: 2025-12-21 02:58 GMT

புதிய படத்தின் புரொமோ ஷூட்டிங்கில், நடிகர் சூர்யா போலீஸ் சீருடையில் தோன்றியது ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது...

கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில், அதில் சூர்யா போலீஸ் சீருடையில் தோன்றியது ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது.

நடிகர் சூர்யா, 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 47வது படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியது.

‘ஆவேசம்’ பட இயக்குனர் ஜித்து மாதவன் இந்த படத்தை இயக்குகிறார்.

சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ‘ழகரம்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். இப்படத்தின் புரொமோ படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வரும் நிலையில், அதில் சூர்யா போலீஸ் சீருடையில் தோன்றியது ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்