"அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது" - பிரதமர் மோடி

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

Update: 2020-07-03 12:45 GMT
லடாக்கின் கிழக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம்15 ஆம் தேதி அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் உயிரிழப்பு பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் லடாக்கிலுள்ள லே பகுதிக்கு இன்று திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றி அவர்களை உற்சாகமூட்டினார். இதையடுத்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராணுவ வீரர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர்களிடையே பேசிய பிரதமர் அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது என்று குறிப்பிட்ட பிரதமர் அனைவரும் விரைவில் நலம்பெற விரும்புவதாகவும் தெரிவித்தார். இந்திய வீரர்களின் தைரியத்தை உலகமே உற்று நோக்குவதாகவும் ராணுவ வீரர்கள் சிந்திய ரத்தம் இளைஞர்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்