ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு காரணம் என்ன? - ஆய்வு அறிக்கைகளை தாக்கல் செய்ய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

ஆந்திர மாநிலம் ஏலூர் நகரில் பரவும் மர்ம நோய்க்கான காரணம் குறித்து மேற்கொள்ளப்படும் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-12-18 04:24 GMT
ஆந்திர மாநிலம் ஏலூர் பகுதியில் 600க்கும் மேற்பட்ட மக்கள் வாந்தி, மயக்கம், மூச்சு விட சிரமப்படுதல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் ஈயம் மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்கள் அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதுகுறித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ஏலூரில் மர்ம நோய் எதனால், எப்படி  பரவுகிறது என்பதை  கண்டறிய நடத்தப்படும் ஆய்வின் இடைக்கால அறிக்கை மற்றும் இதுபோன்று மேலும் நடைபெறாமல் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த அறிக்கைகளை ஜனவரி 12 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மேற்கு கோதாவரி மாவட்ட ஆட்சியர், ஆந்திர மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, ஆந்திர மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு  உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்