ஊட்டி போறீங்களா? - அப்போ உடனே பிளானை மாத்துங்க..

Update: 2024-04-28 12:32 GMT

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் காட்சி நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

உதகையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால், மே மாதம் 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இருந்தே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவதால், அவர்களுக்காக மே 10-ந்தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-ஆவது பழ கண்காட்சி, மே மாதம் 24 ஆம் தேதி முதல், மே 26 ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்