சவுதி இளவரசருக்கு விருந்தளித்த குடியரசு தலைவர் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீடு 2 லட்சமாக அதிகரிப்பு : 850 இந்திய கைதிகளை விடுவிக்க இளவரசர் உத்தரவு

Update: 2019-02-21 05:26 GMT
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார்டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில்,  பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்அப்போது பேசிய குடியரசு தலைவர், இந்தியா, சவுதி மற்றும் உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை வேரறுக்க  வேண்டும் என வலியுறுத்தினார். இதனிடையே, சவுதி சிறைகளில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுவிக்கவும், ஹஜ் புனித யாத்திரை செல்லும் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டை 2 லட்சமாக உயர்த்தியும், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்