ஆற்றைக் கடக்க ஆபத்தான பயணம்.. பாலம் வசதி இல்லாததால் பரிதாபம்.. `நாய் கூட நீந்தி தான் செல்கிறது'

Update: 2024-05-26 14:03 GMT

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே வெங்கலபாளையம், பகுதி நொய்யல் ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றை கடக்க, கிராம மக்கள் ஆபத்தான பரிசல் பயணத்தை மேற்கொள்கின்றனர். கத்தாங்கண்ணி, பாப்பம்பாளையம், உட்பட ஐந்து குக்கிராமங்களை சேர்ந்த மக்கள், நொய்யல் ஆற்றின் மறுக்கரைக்கு செல்ல பாலம் இல்லை என்பதால், ஆற்றின் இருபக்கமும் கம்பு நட்டு அதில் கம்பிகளை கட்டி ஆபத்தான பரிசல் பயணம் மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்