மதுபோதையில் மோதிக்கொண்ட தம்பதி.. மனைவியை கட்டையால் அடித்தே கொன்ற கணவன் - பரபரப்பில் ராமநாதபுரம்

Update: 2024-05-26 13:47 GMT

மதுபோதையில் கணவர் மனைவி இருவரும் மோதிக் கொண்டதில், மனைவியை கணவர் ரீப்பர் கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் பூலித்தேவன் நகரை சேர்ந்த முருகன் - காளீஸ்வரி தம்பதி... அடிக்கடி மதுபோதையில் மோதி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, இருவருக்குமிடையே ஏற்பட்ட மதுபோதை தகராறில், மனைவியை ரீப்பர் கட்டையால் முருகன் அடித்துக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்