10க்கும் மேற்பட்டோரை கடித்த வளர்ப்பு நாய்.. வேலைக்கு வைத்த ஆப்பு.. வெளிநாட்டு பயணம் ரத்து

Update: 2024-05-26 14:04 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியை சேர்ந்த கருப்பையா உணவகம் நடத்தி வரும் நிலையில், வீட்டில் செல்லப் பிராணியாக நாய் ஒன்றும் வளர்த்து வருகின்றார்.

இந்நிலையில், அவர் வளர்த்து வரும் நாய் அதே பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரை காலில் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் தடுப்பூசி செலுத்தி சிகிச்சை பெற்று வரும் நிலையில், குவைத்தில் வேலைக்காக செல்லும் அவரின் விமான பயணத்தை, பயணிக்க தகுதியற்றவர் என கூறி விமான நிலைய அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.

இதனால், தங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் குமுறியுள்ளார்... மேலும், கருப்பையா வீட்டில் வளர்க்கப்படும் நாய், இதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்களை கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளதால், பாதுகாப்பு கருதி ஊராட்சி நிர்வாகம் நாயை அப்புறபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன், இதுதொடர்பாக கீழவளவு காவல்துறையினரிடம் புகாரும் அளித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்