ரஜினிகாந்த் பங்கேற்ற "In to the Wild" நிகழ்ச்சி வரும் மார்ச் 23ஆம் தேதி ஒளிபரப்பு

ரஜினிகாந்த் பங்கேற்ற In to the Wild நிகழ்ச்சி வரும் மார்ச் 23ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக டிஸ்கவரி தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

Update: 2020-02-27 08:09 GMT
ரஜினிகாந்த் பங்கேற்ற In to the Wild நிகழ்ச்சி வரும்  மார்ச் 23ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக டிஸ்கவரி தொலைக்காட்சி அறிவித்துள்ளது. உலக அளவில் அதிக பார்வையாளர்களால் பார்க்க கூடிய இந்த நிகழ்ச்சியை சாகச வீரர் பியர் கிரில்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் வனப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 2வது இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நிகழ்ச்சி வரும் மார்ச் 23ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று டிஸ்கவரி அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்