"செஸ் வீரர்களுக்கு சிறந்த எதிர்காலம்.." - கிராண்ட் மாஸ்டர் குகேஷ் பேச்சு

Update: 2024-04-25 13:55 GMT

சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ், கனடாவின் டொராண்டோ நகரில் நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான ஆட்டத்தில், சீனாவின் டிங் லிரனுடன் குகேஷ் இந்த ஆண்டு இறுதியில் மோத உள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றபோது உணர்ச்சிகள் அதிகம் இருந்ததாகவும், போட்டி முடிவடைந்து சில நாட்கள் ஆகிவிட்டதால் தற்போது சகஜமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் கூறினார்..

Tags:    

மேலும் செய்திகள்