40% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு - உலக சுகாதார நிறுவனம்

நடப்பு ஆண்டின் இறுதிக்குள் உலகின் ஒவ்வொரு நாடுகளிலும் 40 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதே இலக்கு என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-08 06:57 GMT
கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்துவதே தீர்வு என்ற நிலையில் அதற்கான நடவடிக்கையில் உலக சுகாதார நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. 

இந்த நிலையில் செய்தியாளர்களை  சந்தித்த உலக hசுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரோஸ் அதானோம், இந்த ஆண்டின் இறுதிக்குள் உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றதுடன்,  

2022ம் ஆண்டின் இடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயர்த்துவதே இலக்கு என கூறினார். 

இதற்காக 11 பில்லியன் தடுப்பூசிகள் தேவைப்படும் பட்சத்தில், அவற்றை  ஒவ்வொரு நாட்டிற்கும் விநியோகிப்பதில் சிரமம் உள்ளதாக தெரிவித்தார்.

தற்பொழுது உலகளவில் ஒரு மாதத்திற்கு ஒன்றரை பில்லியன் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுவதாக குறிப்பிட்ட உலக சுகாதார அமைப்பு, 

மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை சேர்ந்த மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

அதே நேரம் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் 5 சதவீதத்திற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி கொண்டதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்