உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் - இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல், இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

Update: 2021-10-07 15:02 GMT
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல், இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் 400 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும், 23 ஆயிரத்து 992 கண்டெய்னர்களை கொண்டு செல்லும் திறன்கொண்டது. எவர் ஏஸ் என்று அழைக்கப்படும் இந்த கப்பல், 61.5 மீட்டர் அகலமும், 22.6 கடல் மைல் வேகமும் செல்லக்கூடியது. ஆசிய - ஐரோப்பிய கடல் பயணத்தை, கடந்த ஜூலை மாதம் தொடங்கிய கப்பல், கிங்டாவோ, ஷங்காய், நிங்போ, தாய்பே, யன்டியன், ரொட்டர்டேம், ஹேம்பர்க் மற்றும் பெலிக்ஸ்டோவ் துறைமுகங்களுக்கு சென்றுள்ளது. இந்நிலையில், நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்