பஞ்ச்ஷிர் மாகாணம் - நெருங்க முடியாத தலிபான்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 600 பேரை கொன்ற நிலையில், ஆயிரம் பேர் சரணடைந்துள்ளதாக பஞ்ச்ஷிர் எதிர்ப்புப் படை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-05 04:13 GMT
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 600 பேரை கொன்ற நிலையில், ஆயிரம் பேர் சரணடைந்துள்ளதாக பஞ்ச்ஷிர் எதிர்ப்புப் படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள், தங்கள் ஆட்சியை பிரகடனம் செய்தனர். ஆனால், பஞ்ச்ஷிர் மாகாணத்தை மட்டும்  பிடிக்க முடியவில்லை. இதனிடையே, தலிபான்களிடம் பஞ்ச்ஷிர் வீழ்ந்துவிட்டதாகவும், முழு ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் வசம் வந்ததாகவும் செய்தி வெளியானது. இதை திட்டவட்டமாக மறுத்துள்ள பஞ்ச்ஷிர் எதிர்ப்பு படையினர், தலிபான்களில் 600 பேரை கொன்றுவிட்டதாகவும், ஆயிரம் பேர் சரணடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்