பொள்ளாச்சியை மிரட்டும் வெயில் - தென்னை விவசாயிகளுக்கு விழுந்த பேரிடி

Update: 2024-05-05 11:39 GMT

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வருவதால் கஞ்சம்பட்டி, மாமரத்துப்பட்டி, பழையூர், நாச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானத் தென்னை மரங்கள் நீரின்றி கருகி விட்டன. பல கிராமங்களில் பல ஆயிரக்கணக்கான தென்னைமரங்கள் காய்ந்து, வெட்டி அகற்றும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்குச் சென்று கிணறு, போர்வெல்களில் நீரின்றி தென்னையைக் காப்பாற்ற முடியாமல், ஒரு டிராக்டர் தண்ணீர் 1,5000 ரூபாய் வரை செலவழித்து மரங்களின் உயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

விலை வீழ்ச்சி, நோய்த்தாக்குதல் உள்ளிட்ட காரணிகளினால் பிரச்சனைகளை சந்தித்துவந்த நிலையயில், தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி தென்னை விவ சாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்