டெல்லியில் அண்ணாமலைக்கு...கொடுக்கப்பட்ட ராமர் சீதை சிலை... வாங்கியதும் செய்த செயல்

Update: 2024-05-05 11:21 GMT

டெல்லி மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதி நடைபெறும் நிலையில், டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. இந்த நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார்... முதற்கட்டமாக டெல்லியில் உள்ள சமூக வலைதள உறுப்பினர்களுடன் அவர் கலந்துரையாடினார்... டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்ற நிலையில், டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, ராமர் சீதை சிலையை அண்ணாமலைக்கு பரிசாக அளித்தார்... ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்துடன் இந்த கூட்டமானது துவங்கியது. டெல்லி தேர்தலில் எவ்வாறு சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் மேற்கொள்வது என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்