மதுரைக்கு படையெடுத்த வணிகர்கள்

Update: 2024-05-05 11:17 GMT

41-வது வணிகர் தினத்தை முன்னிட்டு, மதுரையில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநாடு நடைபெற உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காய்கறி சந்தைகள், கடைகள் மூடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி வணிக வளாகத்தில், 90 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளன. நாளை முகூர்த்த நாள் என்பதால் பழம் மற்றும் பூ மார்க்கெட்டுகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் மூடப்பட்டதால், உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தில் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம் சூனாம்பேடு, சோத்துப்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு நகரில் ராஜாஜி சாலை, மணிக்கூண்டு, பழைய அண்ணா சாலை, சின்னமணிக்கார தெரு, பெரிய மணிக்கார தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்