"கொரோனா வைரஸ் கடவுளின் பரிசு" - அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்தால் சர்ச்சை

கொரோனா தொற்று கடவுள் அளித்த பரிசு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Update: 2020-10-09 04:09 GMT
கொரோனா தொற்று கடவுள் அளித்த பரிசு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டிரம்ப்புக்கு தற்போது அறிகுறிகள் ஏதுமில்லை. இந்நிலையில் ஊடகங்களுக்கு விடியோ ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு வழங்கப்பட்டது போன்ற சிகிச்சை அனைத்து அமெரிக்க மூத்த குடிமக்களுக்கும் இலவசமாக கிடைக்கும் என உறுதியளித்தார். கொரோனா பாதிப்புக்கு பின் தான் நன்றாக உணர்வதாகவும், இது கடவுளின் பரிசு எனவும் கூறினார். டிரம்ப்பின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்