மறுமுகத்தை காட்ட போகும் சூரியன்.. வானிலை ஆய்வு மையம் தகவல்

Update: 2024-05-07 05:34 GMT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிமகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 5 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், இதனால் பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளது. அதே சமயம், தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வரும் 7,8 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்