Air Gun | தவறுதலாக தொண்டையில் பாய்ந்த குண்டு.. சிதம்பரம் அருகே பரபரப்பு
சிதம்பரம் அருகே பழைய AIR GUN-ஐ பயன்படுத்திக்கொண்டிருந்தபோது தவறுதலாக சுட்டதில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார். பின்னத்தூர் ராயல் பள்ளி தெருவை சேர்ந்த நண்பர்களான தவ்பிக் மற்றும் முஸ்தபா ஆகியோர் ஏர் கன் ஒன்றை பயன்படுத்தியபோது, குண்டு தவறுதலாக தவுபிக்கின் தொண்டையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.