Parthiban | MK Stalin | முதல்வர், துணை முதல்வருக்கு மனம் உருகி நன்றி சொன்ன நடிகர் பார்த்திபன்

Update: 2026-01-30 07:42 GMT

திரைப்பட விருதுகள் அறிவிப்பு - முதல்வருக்கு நடிகர் பார்த்திபன் நன்றி

தமிழக அரசு சார்பில் திரைப்பட விருது அறிவித்ததற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் பார்த்திபன் நன்றி தெரிவித்துள்ளார்.நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், விருது பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மாவீரன் கிட்டு, ஒத்த செருப்பு திரைப்படங்கள் விருது பெற்றுள்ளதை குறிப்பிட்டுள்ள அவர், இரவின் நிழல் படத்திற்கு கிடைத்துள்ள 5 விருதுகளில், சிறந்த நகைச்சுவை விருது மறைந்த ரோபோ சங்கருக்கு அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன் மற்றும் தேர்வுக்குழுவினருக்கு பார்த்திபன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்