"வேகமாக வளரும் பொருளாதாரம்" - தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதம் என்ற அளவில் குறைவாகவே இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.

Update: 2019-10-16 03:59 GMT
நடப்பு நிதியாண்டுக்கான உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்த கணிப்பை பன்னாட்டு நிதியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், 6.1 சதவீதம் என்றளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட கணிப்பை விட 1.2 சதவீதம் குறைவாகும். எனினும் உலகளவில் அதிவேக பொருளாதார வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் முதல் இடத்தை இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, இந்தியாவை சேர்ந்தவரும், பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணருமான கீதா கோபிநாத் பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டார். அமெரிக்கா - சீனா இடையே நிலவிவரும் வர்த்தக போரினால், 2019ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவீதம் என்ற பெரும் மந்த நிலையை அடையும் என்றார். எனவே, வர்த்தக தடைகளை விலக்கி, சர்வதேச முதலீடு, உற்பத்தி மற்றும் உலக வர்த்தகம் மேம்படுவதற்கு இரு நாட்டு அரசுகளும் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என கீதா கோபிநாத் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்