தமிழ் சினிமாவில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்

Update: 2024-05-06 22:37 GMT

தமிழ் சினிமாவில், மௌனகுரு, மாகமுனி திரைப்படங்களை தொடர்ந்து, சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன்தாஸ் நடிப்பில் 'ரசவாதி' திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருக்கிறது.

பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 'ஸ்டார்', மற்றும் அறிமுக இயக்குனர் ஆதம்பாவா இயக்கத்தில் இயக்குனர் அமீர் நடிக்கும் 'உயிர் தமிழுக்கு' ஆகிய மூன்று திரைப்படங்கள் வருகிற மே 10-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. சந்தானம் நடிப்பில் வெளியாகவிருந்த 'இங்க நான்தான் கிங்கு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி, மே 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே மே 17ல் உறியடி விஜய்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் 'எலக்ஷன்' படமும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்