பள்ளிகள் திறப்பு... மாணவர்களுக்கு வரும் குட் நியூஸ்?

Update: 2024-04-25 12:42 GMT

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இல்லத்தில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் புதிய மாணவர் சேர்க்கை, பள்ளி திறக்கப்பட்டதும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் தற்போது கடுமையான வெயில் நிலவி வரும் நிலையில், பள்ளிகள் திறப்பை எப்போது வைத்துக் கொள்வது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்....

Tags:    

மேலும் செய்திகள்