முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

Update: 2024-04-27 09:41 GMT

நீதிக்கட்சியின் தந்தை என போற்றப்படும் சர் பிட்டி தியாகராயரின் பிறந்த நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் நினைவுகூர்ந்துள்ளார்... திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர் என்றும், அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்... சர் பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி என்றும், வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குவதாகவும் முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்