போராட்டம் நடத்திய மாணவர்கள் - விரட்டி விரட்டி கைது செய்த போலீசார்

ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-17 12:14 GMT
ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டனர். 

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்த கோரி கடந்த இரு தினங்களாக பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசார் மாணவர்களை விரட்டி கைது செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 710 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தவறான கருத்துகளை பதிவிடும் முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 5 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மீதும் தனித்தனியாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

மேலும் செய்திகள்