முகக் கவசம்- மெட்ரோவில் அபராத வசூலிப்பு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மெட்ரோ ரயில் மற்றும் நிலையங்களில் முகக் கவசம் அணியாதோரிடம் அபராதம் விதிப்பதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Update: 2021-11-12 04:01 GMT
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், முகக் கவசம் அணியாதோருக்கு மாநிலம் முழுவதும் தலா 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல், மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் ரயிலில் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதை நிறுத்தி உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மெட்ரோ ரயில் நிறுவனம் உரிய சட்டம் இயற்றாமல், செப்டம்பர் 13ஆம் தேதி வரை 87ஆயிரம் ரூபாய் வசூலித்து உள்ளதாகவும், அதை மாநில கருவூலத்தில் செலுத்த உத்தரவிடவும் கோரப்பட்டது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையத்திலும் உள்ளதைப்போல் அபராதம் வசூலித்ததாக மெட்ரோ தரப்பு கூறியது. இதைக் கேட்ட நீதிபதிகள், உரிய சட்டம் இயற்றாமல் அபராதம் வசூலிப்பதை ரத்து செய்து உத்தரவிட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்