கர்நாடகாவில் இருந்து மதுபானம் கடத்தல் - பெட்டி பெட்டியாக மதுபானம் பறிமுதல்

கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ஆயிரத்து 680 மது பாட்டில்களை திருக்கோவிலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்

Update: 2021-06-07 10:25 GMT
கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ஆயிரத்து 680 மது பாட்டில்களை திருக்கோவிலூர் போலீசார் பறிமுதல் செய்தனர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புறவழிச்சாலை மண்டபம் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ஆயிரத்து 680 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது,. இதனையடுத்து வாகனத்தின் ஓட்டுநரான பெங்களூருவை சேர்ந்த  சரத், வாகனத்தின் கிளினரான செஞ்சியை சேர்ந்த விஜய் மற்றும் இதற்கு மூளையாக செயல்பட்ட வேங்கூர் பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும், அவற்றை ஊரடங்கில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது. 35 பெட்டிகளில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் தற்போது பாதுகாப்பாக திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

மேலும் செய்திகள்