பிரதமர் மோடியே ரசித்த வீடியோ. "3மணி நேரம் தான் உங்களுக்கு டைம்" கோபத்தில் கொந்தளித்த தேர்தல் ஆணையம்

Update: 2024-05-07 06:16 GMT

AI தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட டீப் பேக் வீடியோக்கள், ஆடியோக்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக, சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உட்பட ஏராளமானோர் குறித்து, டீப் பேக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், டீப் பேக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஃபேக் வீடியோக்கள் மூலம் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொய்யான வீடியோக்கள், உண்மைக்கு மாறான தகவல்களை பரப்ப‌ப்படுவது சட்டவிதிகளுக்கு எதிரானது என கூறியுள்ளது. இது போன்று, டீப் பேக் வீடியோக்கள், தகவல்கள் குறித்து நோட்டீஸ் அனுப்பிய 3 மணி நேரத்திற்குள், அவற்றை சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து அரசியல் கட்சிகள் நீக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்