கொரோனா சிகிச்சை அதிக கட்டணம் வசூல் - சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை

கொரானா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு அதிகமாக வசூலித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Update: 2020-10-04 02:56 GMT
ஆதம்பாக்கத்தை கணேஷ் என்பவர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விரிவான மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட எனது தந்தைக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் சிகிச்சையளிக்க 10 நாட்களுக்கு 7 லட்சத்திற்கும் மேல் மருத்துவமனை நிர்வாகம் வசூலித்தது என்றும் கூறியிருக்கிறார். சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் தான் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, அதிகமாக வசூலித்த தொகையை திருப்பிதர மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்