சென்னை வானிலைஆய்வு மையம் - விடுத்த எச்சரிக்கை

Update: 2024-04-30 09:36 GMT

வட தமிழக உள் மாவட்டங்களில் நாளை முதல் 3ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது..

அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... நாளை முதல் அடுத்த 3 தினங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிக வெப்பம் பதிவாக வாய்ப்புண்டு. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 108.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்