"தொழில்நுட்பக் கோளாறால் மாணவர்கள் அச்சம்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழகம் இணையவழியாக நடத்திய முன்மாதிரித் தேர்வின்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் மாணவர்களிடையே அச்சமும், பதற்றமும் உருவாகி இருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-22 02:47 GMT
அண்ணா பல்கலைக்கழகம் இணையவழியாக நடத்திய முன்மாதிரித் தேர்வின்போது தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதால் மாணவர்களிடையே அச்சமும், பதற்றமும் உருவாகி இருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாதிரித் தேர்வுகளிலேயே இவ்வளவு குளறுபடிகள் மலிந்திருந்தால், எந்த நம்பிக்கையில் இறுதித் தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் எழுத முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாணவர்கள் எந்த குழப்பமுமின்றி தங்கள் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய ஏற்பாடுகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்வு எழுத முடியாத மாணவர்களின் நலனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்