தமிழகத்தையே உலுக்கிய ஏற்காடு கோரம் -ஆய்விற்கு பின் அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்.. "இன்னும் அதிகமா இருக்கும் "

Update: 2024-05-02 02:14 GMT

ஏற்காடு பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சேலம் போக்குவரத்து ஆணையர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்து, 13வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து 100 அடி உயரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக, சேலம் போக்குவரத்து மண்டல போக்குவரத்து துணை ஆணையர் பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள், விபத்துக்குள்ளான பேருந்தினுள் ஏறி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பேருந்தின் ஸ்டியரிங், பிரேக், கியர் ராடு என அனைத்தும் நல்ல முறையில் உள்ளதாகவும், ஓட்டுநரின் கவனக்குறைவால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்