கரூரை டார்கெட் செய்த சம்மர்.. "47 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சென்னையில்.." | Thanthitv

Update: 2024-05-02 02:12 GMT

அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 111.20 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்துள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலையாகும். சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், கோவை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, காரைக்கால், மதுரை நகரம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகி உள்ளது. இதேபோல், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, புதுச்சேரி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய இடங்களிலும் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் பதிவாகி, மக்களை வாட்டி வதைத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் மேற்கு வட மேற்கு மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்