சந்தன கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாஜகவில் பதவி

தமிழகத்தில் புதிய பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-07-15 17:56 GMT
தமிழகத்தில் புதிய பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகளுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மாநில இளைஞரணி துணை தலைவியாக வீரப்பன் மகள் வித்யா நியமிக்கப்பட்டுள்ளார். இதே​போல,  நடிகர் ஆர்.கே. சுரேஷ் - மாநில - OBC அணி
துணை தலைவராகவும், இயக்குனர் பேரரசு, இசை அமைப்பாளர் தீனா ஆகியோர் பாஜக கலை கலாச்சார பிரவு மாநில செயலாளர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நடிகர்கள் ராதா ரவி, விஜயகுமார், இயக்குனர் கங்கை அமரன் ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்