"பாடத்திட்டத்தை மாற்றும் தேர்வாணையத்தின் முடிவு சரியானது" - பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளதால், தமிழ் தெரியாதவர்கள் அரசுப் பணிகளில் நுழைவது தடுக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-29 11:44 GMT
அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 தேர்வுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைத்துள்ளதால், தமிழ் தெரியாதவர்கள் அரசுப் பணிகளில் நுழைவது தடுக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தெரியாதவர்கள் கூட போட்டித்தேர்வுகளில் வெற்றிப்பெறும் வகையில் பாடத்திட்டம் இருந்ததால் தான் அரசுப் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்வதற்கு காரணமாக இருந்ததாகவும். அந்த நிலையை மாற்ற பாடத்திட்டத்தை மாற்றும் தேர்வாணையத்தின் முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்