ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் - திருமணத்திற்கு நகை வாங்க வந்தவர்களிடம் பணம் பறிமுதல்

திருமணத்துக்கு நகை வாங்க வந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-07-22 19:06 GMT
வேலூரில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, குடியாத்தம் நோக்கி வந்த ஒரு காரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி 2 லட்சம் ரூபாய் கொண்டு வந்தது  தெரியவந்ததையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது நடத்திய விசாரணையில் பணம் கொண்டு வந்தவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதும், திருமணத்துக்காக நகை வாங்க வந்ததாகவும் கூறியுள்ளனர். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் தர மறுத்த நிலையில் அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் பணம் இல்லாமல் வீட்டுக்கு போகமாட்டேன் என கூறி அடம்பிடித்த நிலையில் வட்டாட்சியர் அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்