சர்வதேச படகு வடிமைப்பு போட்டி : எடை குறைவான கான்கிரீட் படகு வடிவமைத்து மாணவர்கள் சாதனை

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச படகு வடிவமைப்பு போட்டியில், இந்தியாவிலிருந்து பங்கேற்ற சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவர் குழு, எடை குறைவான கான்கிரீட் படகு வடிவமைத்து சாதனை படைத்தது.

Update: 2019-07-14 11:48 GMT
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற 2019 ம் ஆண்டுக்கான சர்வதேச படகு வடிவமைப்பு போட்டியில், இந்தியாவிலிருந்து முதன்முறையாக ஈரோடு, சத்தியமங்கலத்தை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் குழுவினர் பங்கேற்றனர். இந்த போட்டியில் இந்த மாணவர்கள் குழு, எடை குறைவான கான்கிரீட் படகை வடிவமைத்து இயக்கி காட்டி சாதனை படைத்தனர். மும்பையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதால் இந்த அணியினருக்கு அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 25 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட மாணவர் குழு, தாங்கள் வடிவமைத்த எடை குறைவான லகுரக படகை அங்குள்ள ஏரியில் இயக்கி காட்டினர். போட்டியை நடத்திய அமைப்பினர் மாணவர்களின் படகு வடிமைப்பிற்கு பரிசாக 1500 டாலர் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்