காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-04 01:07 GMT

இந்தியா கூட்டணி, நாட்டில் கட்டுப்பாடற்ற கொள்ளையை கட்டவிழ்த்துவிட விரும்புகிறது... ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு...

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்போது, இந்தியாவின் யதார்த்த நிலையை மக்கள் தெரிந்து கொள்வார்கள்...மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பேச்சு...

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸை கண்டுபிடிக்க ராகுல்காந்தி யாத்திரை நடத்த வேண்டியிருக்கும்....கோவாவில் நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு...

கொடைக்கானலில் ஓய்வுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பினார்...ஒருநாள் முன்னதாகவே பயணத்தை முடித்துக்கொண்டு வருகை...

தமிழகத்தில் அக்னி வெயில் இன்று முதல் தொடக்கம்...ஏற்கனவே வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பொதுமக்களே உஷார்...

உதகை, அரூர், தாளவாடி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை.....வெப்பத்தை சற்று தணித்ததால் மக்கள் நிம்மதி..... 

தமிழகத்தில் வரும் 7ம் தேதி நீலகிரி, ஈரோடு, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூரில் கனமழை பெய்யும்...வானிலை ஆய்வு மையம் தகவல்...

தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா சொன்னது என்ன?

மும்பையில் நடந்து வரும் வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் பங்கேற்பு.....புகைப்படங்களை வெளியிட்டது லைகா நிறுவனம்.......

ஐ.பி.எல். 51வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி...மும்பையை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது...

ஐபிஎல் 52வது லீக் போட்டியில் இன்று குஜராத் அணியை, பெங்களூரு அணி எதிர்கொள்கிறது...

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி...

 

Tags:    

மேலும் செய்திகள்