தமிழ்நாடு : 119 அரசு பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நாளை

தமிழகம் முழுவதும் ஆயிரத்து 119 அரசு பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நாளை நடைபெறுகிறது.

Update: 2018-11-10 08:32 GMT
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்- 2 தேர்வுக்கு, 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 2 ஆயிரத்து 268  தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட 997 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹால் டிக்கெட் இன்றி, தேர்வறைக்குள் அனுமதியில்லை காலை 9 மணிக்குள் வரவேண்டும், நீலம் அல்லது கருப்பு நிற பால் பாயிண்ட் பென் மட்டுமே பயன்படுத்த வேண்டும், என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன் வினாத் தாள்  வழங்கப்படும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் அதற்கான வினாத்தாள் தரப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கவேண்டும், விடைகளை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செல்போன், மின்னணு சாதன பொருட்களுக்கு அனுமதியில்லை என்றும், ஒரு கேள்விக்கு ஒரு விடையை மட்டுமே எழுத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வறையில் தவறான மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வாணையம் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்